கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட டொராண்டோ பெண்: கொலையாளி கைது

கனடாவில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளியை பொலிசார் கைது செய்துள்ளனர். டொரண்டோவை சேர்ந்த விர்ஜில் ஜாக் (31) என்ற பெண்ணின் சடலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் டெரிடவுன்ஸ் பூங்காவில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து பொலிசார் மீட்டனர்.
பிரேத பரிசோதனையில் விர்ஜில் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த பொலிசார் கடந்த 11-ஆம் திகதி நிகோலஸ் ஜான்சன் (24) என்ற இளைஞரை கைது செய்தார்கள்.
இதையடுத்து அடுத்தநாளே ஜான்சன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் வேறு நபர்களை பொலிசார் தேடி வருவதாக தான் நம்பவில்லை என பொலிஸ் அதிகாரி கேரி லாங் கூறியுள்ளார். சம்பவம் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.