Canada

கனடாவின் சீரியல் கில்லர் சிக்கினார்!

கனடாவின் ஓரினச்சேர்க்கை கிராமத்தில் காணாமல் போனவர்கள் சீரியல் கில்லரால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கனடாவின் ஓரினச் சேர்க்கைக் கிராமத்தினர் பலர் காணாமல் போனார்கள்.

சீரியல் கில்லர் ஒருவன் தங்கள் கிராமத்தைக் குறிவைத்துள்ளதாகக் கலக்கம் அடைந்த அந்தக் கிராமத்தினரை பொலிசார் அமைதிப்படுத்தினர். இந்நிலையில் Andrew Kinsman மற்றும் Selim Esen என்னும் இருவரைக் கொலை செய்ததாக 66 வயதுடைய Bruce McArthur என்பவர் பொலிசில் சிக்கினார்.

மேலும் விசாரணையில் Majeed Kayhan, Soroush Marmudi மற்றும் Dean Lisowick என்னும் மூன்று பேரை அவர் கொலை செய்தது கடந்த திங்களன்று தெரிய வந்தது. எனவே, இது ஒரு கிராமத்துடன் தொடர்புடைய சம்பவம் அல்ல கனடா முழுவதுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

McArthurக்கு சொந்தமான இடங்களில் பொலிசார் சோதனை மேற்கொண்டபோது பல இடங்களில் மனித உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. இந்த உடல்களுக்கும் கைது செய்யப்பட்டுள்ள McArthurக்கும் தொடர்புள்ளதா என்பது சரியாகத் தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் McArthurக்கு சொந்தமான பல இடங்களில் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். பல இடங்களில் பொலிசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக தடயங்களை அழிக்க முயன்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இன்னும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாமோ தெரியவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top