Canada

கனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொன்ற காதலன்:

கனடாவில் முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பியோடிய காதலனை கைது செய்த பொலிசார் கனடாவுக்கு அழைத்து வந்துள்ளனர்நா ட்டின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரை சேர்ந்தவர் ஏஜர் ஹசன் (24). இவரும் மெலிண்டா வசிலிஜி (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் காதலனை விட்டு மெலிண்டா பிரிந்துள்ளார்.

mஇதை தாங்கி கொள்ள முடியாத ஹசன் மெலிண்டாவின் அடுக்குமாடி குடியிருப்புக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸுக்கு தப்பியோடிய ஹசனை கனடா பொலிசார் கடந்த யூலை மாதம் கைது செய்தார்கள்.

அங்குள்ள நீதிமன்றத்தில் ஹசன் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தன்னை கனடாவுக்கு அனுப்பக்கூடாது என நீதிபதியிடம் கோரினார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கனடாவுக்கு ஹசனை கொண்டு செல்ல நீதிமன்றம் நவம்பரில் உத்தரவிட்டது.

nஇதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஹசன் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டார். திங்கள்கிழமை ஹசன் மீதான வழக்கு விசாரணை ஒன்றாறியோ நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top