கனடாவில் காதலியை கத்தியால் குத்திக்கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கனடாவில் முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டின் டொரண்டோவை சேர்ந்தவர் லாசிலீஸ் ஆலன் (54), இவரும் சுரையா கங்கார்மன் (31) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.
சுரையாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆலனுடனான காதலை சுரையா முறித்து கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த 2015 மே 8-ஆம் திகதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சுரையாவை ஆலன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் தற்கொலைக்கு முயன்ற ஆலன் ரயில் முன்னால் குதித்துள்ளார், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்த நிலையில் அவரின் கால்களின் கீழ் பகுதி துண்டிக்கப்பட்டது.