Canada

கனடாவில் கோடிஸ்வரர் Barry, Honey Sherman மரணத்தில் பொலிசார் புதிய தகவல்

கனடாவைச் சேர்ந்த கோடிஸ்வரர் மரணத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கனடாவின் Toronto பகுதியைச் சேர்ந்தவர் Barry(75), 365 கோடி டொலருக்கு சொந்தக்காரரான இவருக்கு Honey Sherman(70) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பான விசாரணையை பொலிசார் தொடர்ந்து நடத்தி வந்த வேளையில், இது ஒரு கொலை என பொலிசார் தெரிவித்துள்ளார். அவர்கள் தெரிவிக்கையில், இது தொடர்பான தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தோம். அவர்கள் வீட்டை தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போது, அதில் சில தடயங்கள் சிக்கின.

அதை வைத்து விசாரணை நடத்தினோம், அதுமட்டுமின்றி அவர்களை ஆண்கள் பயன்படுத்தும் லெதர் பெல்ட்டை வைத்து, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் Barry-யின் மொத்த சொத்து மதிப்பு 4.77 பில்லியன் கனேடிய டொலர் எனவும் அதாவது அமெரிக்க மதிப்புக்கு இது 3.65 பில்லியன் டொலர் இருக்கும் என கனடாவின் Business magazine சமீபத்தில் தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி இவர் அந்நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடம் கிடைத்திருந்ததாகவும், அந்த நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top