News

கனடாவில் நடக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வை கண்காணிக்கும் இலங்கைத் தூதரகம்!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில், ஜனவரி 19ஆம் நாள் ஆரம்பமாகி இரண்டவது
நாளக நடந்து வருகின்றது.

இந்தக் கூட்டத் தொடர் குறித்து, கனேடிய வெளிவிவகார அமைச்சிடம், வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், தனிநாட்டுக் கொள்கையை ஊக்குவிக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு, கனடாவில் நடந்து வரும் நிலையில், அங்குள்ள இலங்கைத் தூதரகம் அதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன” என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top