கனடாவில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் ஆளும் லிபரல் கட்சி

மரபுரிமைத் தினங்களில் ரொரன்ரோ பெரும்பாகத்தில் பல பொங்கல் விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியும் தமிழ் மக்களுடனான பொங்கல் விழாவுக்கு தயாராகி வருகிறது.
ஸ்காபுரோவில் அமைந்துள்ள ஸ்காபுரோ கொன்வென்சன் சென்ரரில் ஜனவரி 16ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு இந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.
ரொரன்ரோ பெரும் பாகத்தில் உள்ள 18 லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றார்கள். கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கிறார்.