கனடாவின் வான்கோவர் கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தீவுப்பகுதியில், நகர வாழ்க்கையை விட்டு, கடல் முகத்துவாரத் தண்ணீரில் கோட்டையை அமைத்து வாழ்ந்து வருகின்றனர் வயதான தம்பதியினர். பசுமை வீடு, நடன அரங்கம், கலைக்கூடம், விருந்தினர்களுக்கான கலங்கரை விளக்கக் கோபுரம், மின்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 12 அறைகள் கொண்ட பரந்து விரிந்த ஒரு கட்டடத்தைக் கொண்டு அந்தக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது.
வெய்ன் ஆடம்ஸ் (66) மற்றும் கேத்ரின் கிங் (59) தம்பதியனரே அந்தக் கோட்டையில் வசித்து வருகின்றனர். அந்தக் கோட்டை கடற்கரை கழிமுகப் பகுதியில் இருக்கும் நீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. token=”z9WWzbzevTA” 1992-ம் ஆண்டு அந்த மிதக்கும் கோட்டையை வெய்ன் ஆடம்ஸ் அமைத்தார். இந்தக் கோட்டை முதன் முதலில் சாதாரணமாகத்தான் கட்டினார்கள். பின்னர் அங்கேயே வாழ்க்கையை வாழ விரும்பிய தம்பதிகள் இருவரும் கோட்டையாக மாற்றிக் கொண்டார்கள்.
உணவுக்காக அரை ஏக்கரில் நிலத்தில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். உணவுக்காகத் தேவைப்படும் மீன்களை வெய்ன் ஆடம்ஸ் தனது மனைவி கேத்ரின் கிங்குடன் அவ்வப்போது படகில் சென்று பிடித்துக் கொள்கிறார். மழை எப்போது பெய்தாலும் குடி தண்ணீராகச் சேமித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தீவில் உள்ள தண்ணீரில் வாழ்ந்து வந்தாலும் கோடைக்காலத்தில் அருகில் இருந்து வரும் தண்ணீரால் கோட்டையும், அதனால் தம்பதியும் எப்போதும் மிதந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கோட்டையைச் சுற்றிலும் 14 சூரிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இரவில் எப்போதும் கோட்டை மிளிர்ந்து கொண்டே இருக்கும். கோடைக்காலத்தில் இந்தத் தம்பதிகளைப் பார்க்க அதிகமான நண்பர்கள் வருகை தருகின்றனர். ”இறப்பு வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் இறுதி ஆசை. இவ்வளவு வயதாகியும் வெய்ன் ஆடம்ஸ், கேத்ரின் கிங் ஆகிய இருவருக்கும் இந்த வாழ்க்கையைப் பற்றிய சிறிதும் கவலை இல்லை. அவர்களது முகத்தில் எப்போதும் சிரிப்பு இருந்து கொண்டே இருக்கிறது.