Canada

கனடாவில் வரலாறு காணாத பனி

வட அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத பனி 2018ம் ஆண்டின் ஆரம்பம் வரை நீடிக்கும் என வானிலை அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் ஐஸ் பெட்டி என அழைக்கப்படும் மின்னிசோட்டா மாகாணத்தில் வெப்பநிலையானது மைனஸ் 38.3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்து காணப்பட்டுள்ளது. மேலும் உலகின் மோசமான காலநிலையின் தாயகமாக கருதப்படும் நியூ ஹாம்ப்ஷயரிலுள்ள மவுண்ட் வோஷிங்டனில் முதல் முறையாக குறைந்த வெப்பநிலையாக மைனஸ் 36.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதேபோன்று கனடாவின் சில பகுதிகளில் வட துருவம் மற்றும் புதன் கோளில் நிலவும் வெப்பநிலையை விட குளிரான சூழ்நிலை நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பென்சில்வேனியாவில் உள்ள எரீ என்ற இடத்தில் கிறிஸ்துமஸ் தினம் முதல் தொடர்ந்து பொழிந்து வரும் பனி ஐந்து அடிக்கும் அதிகமான அளவு தேங்கியுள்ளது எனவும் இந்தப் பனியை அகற்றுவதற்காக ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது< இந்தநிலையில் நியூ ஜெர்சியின் பல பகுதிகளில் புத்தாண்டு தினத்தன்று நடைபெறுவதாக இருந்த கொண்டாட்டங்கள் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top