Canada

கனடா சுற்று சூழல் ஒரு விசேட வானிலை அறிக்கை

தற்போதய மிதமான வானிலை வார இறுதி மட்டும்தான். மீண்டும் மற்றொரு குளிர் கால வெடிப்பு வார இறுதியில் ஏற்படும். வியாழக்கிழமை கனடா சுற்று சூழல் ஒரு விசேட வானிலை அறிக்கையை ரொறொன்ரோ, ஹமில்ரன், மற்றும் ஹால்ரன் பிராந்தியம், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பகுதிகளிற்கு விடுத்துள்ளது.

இன்றய மிதமான வெப்பநிலை மற்றும் மழை காலநிலையை தொடர்ந்து மிகவும் வலுவான குளிர் காலநிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ரொறொன்ரோவில் அதி உயர்வாக 9 C ஆக இருந்தது. அசாதாரணமான மற்றும் மெல்லிய மழை காணப்பட்டது. இரவு மழை தீவிர மடைந்து வெள்ளிக்கிழமையும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 20மில்லி மீற்றர்கள் அளவிலான மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையினால் நீர் மட்டம் உயர்வடையலாம் எனவும் குளங்கள் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரிக்கலாம் என்பதால் மக்கள் விலகி இருப்பது நலம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மழை மிக விரைவாக பனியாக மாற்றமடையும். மாற்றத்தினால் உறை பனி நிலை ஏற்படலாம். பனிபொழிவு குறிப்பிட்ட ஒரு அளவிற்கு இடம்பெறும்.

குளிரான காற்று வெள்ளிக்கிழமை காணப்படுவதால் வீதிகள் நடை பாதைகள் உறை பனி நிலைக்கு ஆளாகும். உறை பனி நிலைக்கு கீழான வெப்பநிலை வெள்ளிக்கிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. ரொறொன்ரோவில் சனிக்கிழமை -10 C ஆக காணப்படுவதுடன் நகரில் ஞாயிற்றுகிழமை -11 C ஆக காணப்படும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top