Canada

கனடா நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதல்: ஒருவர் பலி

கனடா நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாட்டின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள மேற்கு கூக்ஸ்டவுன் நகரில் தான் இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நடந்துள்ளது.

அங்குள்ள நெடுஞ்சாலை 89-ல் இரண்டு கார்கள் வேகமாக வந்த நிலையில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் அங்கேயே உயிரிழந்தார். இன்னொருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் விபத்தையடுத்து நெடுஞ்சாலை 89-ன் துணைப்பாதை 15 மற்றும் 20 தற்காலிகமாக சில மணி நேரங்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top