கனடா விமான நிலையத்தில் விமானங்கள் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

கனடாவின் டொரொன்டோ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று மற்றுமொரு ஜெட் விமானமொன்றில் மோதியதில் விமானத்தின் இறக்கை தீப்பற்றி எரிந்துள்ளது.
மெக்சிகோவில் இருந்து வந்த வெஸ்ட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் தரை இறங்கியது. இதில் 168 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானத்தில் இருந்து கீழே இறங்க அனைவரும் தயாராக இருந்தனர்.
அப்போது அருகே காலியாக இருந்த சன்விங் நிறுவன விமானம் மீது மோதியது. இதில் வெஸ்ட்ஜெட் விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் விமான நிலையத்தில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும் விரைந்தனர். அதற்குள் விமானத்தின் அவசர வழிகள் திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.