கனடியர்கள் இருவர் நைஜீரியாவில் கடத்தப்பட்டனர்!

ஒட்டாவா-கனடா உலகளாவிய விவகார பிரிவு இரண்டு கனடிய பிரசைகள் நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலதிக விபரங்களை பெறும் பொருட்டு நைஜிரிய தூதரக அதிகாரிகள் உள்ஊர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியுரிமை காரணங்களிற்காக மேலதிக விபரங்கள் வெளியிடப்பட மாட்டாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் நைஜீரியாவின் வடபகுதி மாநிலமான கடுனா ஊடாக பயணித்து கொண்டிருந்த கனடியர்கள் இருவர் மற்றும் அமெரிக்கர் இருவர்களை பதுங்கியிருந்து தாக்கியதாகவும் பொலிசார் இருவரை கொன்றதாகவும் மாநில பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் முதலீட்டாளர்கள் என்றும் இவர்கள் கவான்சான் கிராமங்களை சுற்றி சூரிய மின்கல நிலையங்களை அமைத்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள்-கடத்தல் எதிர்ப்பு அலகு உட்பட்ட- அதிகாரிகள் கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்ப பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.