Canada

கனடிய பல்கலை கழகங்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள அனாமதேய பார்சல்கள்!

பல கனடிய பல்கலைக்கழக மாணவர் யூனியன்கள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளான நிலைமையில் உள்ளனர். பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து பெற்றுவரும் சீரற்ற பொருட்கள் அடங்கிய பார்சல்களே இதற்கு காரணம். இப்பொதிகளிற்குள் செக்ஸ் பொம்மைகள், லைற் பல்ப்புக்கள், றெக்கோட் பிளயர்கள் முதல் கணனி கேபிள்கள் போன்றவைகள் காணப்படுகின்றன.

அமசோன் பக்கேஜிங்களில் இந்த பொருட்கள் வருகின்றன இவைகளை யார் ஆர்டர் செய்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் தாங்கள் நிச்சயமாக குழம்பிய நிலையில் இருப்பதாக றிஜைனா பல்கலைக்கழக மாணவர் யூனியன் மாணவர் விவகார துணை தலைவர் ஷான் விஸ்கார் தெரிவித்தார்.

தனது மாணவர் யூனியன் கிட்டத்தட்ட 15அனாமதேய பொதிகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றுள் பலவேறு வகையான பொருட்கள் அடங்குகின்றன. ஐபாட் உறைகள், சமையலறை அளவுகள் மற்றும் கை மின்விளக்கு வடிவில் ஆண்களின் செக்ஸ் பொம்மை போன்றவைகள். மற்றும் ஐந்து பல்கலைகழக மாணவர் யூனியன்களும்–டால்ஹவுஸ் பல்கலைக்கழகம், ஹலிவக்ஸ். பிரான்சிஸ் ஷேவியர், அன்ரிகோனிஷ். நோவ ஸ்கோசியா, றயசன் ரொறொன்ரோ, வில்விறெட் லோறியர் வாட்டர்லூ, ஒன்ராறியோ. மற்றும் மனிரோபா பல்கலைக்கழகம் போன்றனவைகளும் தாங்கள் மர்மமான இத்தகைய அமசோன் பார்சல்களை பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.

அமசோன் உட்பட்ட அனைவரும் இந்த மர்மம் பொதிகளை ஆர்டர்களிற்கு பின்னால் இருப்பது யார் என கண்டறிவதில் முனைந்துள்ளனர். இத்தகைய பார்சல்கள் ஏன் வருகின்றன எப்போது நிறுத்தப்படும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த நவம்பரில் றிஜைனா பல்கலை கழக மாணவர் யூனியனிற்கு முதல் அனாமதேய பார்சல் கிடைத்த போது எவருக்கும் இது குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் ஒரு வாரத்தின் பின்னர் இரண்டாவது பார்சல் வந்ததும் புருவங்கள் உயர்த்தப்பட்டன. அதிர்வுறு செக்ஸ் பொம்மைகளுடன் ஒற்றை படையான இரு செல் போன் சார்ஜர்களும் அடங்கியிருந்தன. அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இப்பொருட்களிற்கு எவரும் உரிமை கோரவில்லை. பொருட்கள் தொடரந்து வந்து கொண்டிருந்தன. இவற்றுள் முதல்-உதவி பெட்டி ஒன்று மற்றும் ஒரு சோடி சுழலும் றெக்கோட் பிளையர்களும்-கனடிய பக்க அமசோன் சில்லறை விலையில் ஒவ்வொன்றும் டொலர்கள்89.99. இச்செயல் அனைத்தும் கூட்டாளி பல்கலைக்கழகங்களின் விரிவான புரளி என கருதப்பட்டது.

றயர்சன் பல்கலைக்கழகத்திற்கும் பல பார்சல்கள் வந்துள்ளன.அக்டோபரில் முதல் பொதி வந்துள்ளது.சில வயர்லஸ் ஹெட் போன்கள் மற்றும் ஒரு பொம்மை தொட்டி.
தொடர்ந்து பல பொருட்கள் குவியத்தொடங்கின. றயர்சன் பல்கலைக்கழக செய்தி பத்திரிகை The Eyeopener இக்கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. ஒரு அதிர்வு பொம்மை சிபிசி செய்தியிடம் படங்களிற்காக கொடுக்கப்பட்டது. தனியுரிமை காரணங்களினால் அனுப்புபவர்கள் யார் என்பதை வெளியிட முடியாதென நிறுவனம் தெரிவித்துள்ளது. அமசோனும் இது குறித்து விசாரனை நடாத்தி வருகின்றது. பார்சல்கள் வருவதும் தொடர்கின்றன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top