Canada

கல்கரியில் அரண்மனை விற்பனைக்கு!

நாம் அனைவரும் ராஜபரம்பரையை சேரந்தவர்களாக இருக்க சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இப்போது விரும்புவது போன்று அரண்மனையில் வாழ சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. அரண்மனை ஒன்று கல்கரியில் சந்தைக்கு வந்துள்ளது.

தேவதை கதைகளை வாசிக்கும் போது பலருக்கு அரண்மனை கற்பனையில் தோன்றியிருக்கும். ஆனால் சரியான வாங்குபவருக்கு கற்பனை நிஜமாக மாறும். கல்கரியில் Upper Mount Royal பகுதியில் ஒரு 3,175-ஏக்கரில் அமைந்துள்ள இந்த வீடு கடந்த ஞாயிற்றுகிழமை அதன் முதலாவது தடவை பொதுமக்களிற்காக திறந்து விடப்பட்டபோது 400 பேர்களை கவர்ந்துள்ளது.

இந்த வீட்டில் வசிக்க ஆரம்பிப்பவர்களிற்கான விலை டொலர்கள் 1,750,000 ஆகும் என தரகர் டானியல் லிபிளாங் தெரிவித்துள்ளார். 1946ல் கட்டப்பட்ட இந்த விட்டில் பாலம், ஆறு சுழல் படிக்கட்டுக்கள், நிலப்பகுதியை பார்க்ககூடியதான மேலாதிக்க கோபுரம் ஒன்று மற்றும் ராஜபுதன பொழுது போக்குகளிற்கான முற்றம் ஒன்று போன்றவைகளை கொண்டுள்ளது.

மரப்பலகைகளினாலான அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், நான்கு படுக்கை அறைகள் 3.5குளியலறைகள், பிரகாசமாக வடிவமைக்கப்பட்ட வின்ரேஜ் கம்பளங்கள் கொண்டவை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top