Canada

கியுபெக்கின் வரலாற்றில் மிகப்பெரிய குறைந்த பட்ச ஊதிய அதிகரிப்பு!

கியுபெக் தொழில் அமைச்சர் டொமினிக் வெயின் மே 1ந்திகதியிலிருந்த கியுபெக்கின் குறைந்த பட்ச சம்பளம் 12-டொலர்களாக அதிகரிக்கும் என புதன்கிழமை அறிவித்துள்ளார். கியுபெக் வரலாற்றில் மிகப்பெரிய குறைந்த பட்ச ஊதிய அதிகரிப்பு இதுவாகும். தற்போது டொலர்கள் 11.25 ஆக இருக்கும் தொகை 75-சதங்களால் அதிகரிக்கப்படுகின்றது.

கியுபெக்கின் வளர்ந்து வரும் பொருளாதாரம் சராசரி மணித்தியால சம்பள உயர்விற்கு உதவியதென இவர் தெரிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களிற்கு நல்ல செய்தியாக அமைவதுடன் வறுமை நிகழ்வை குறைக்க உதவும் தெரிவித்துள்ளார். கியுபெக்கின் 12-டொலர்கள் குறைந்த பட்ச ஊதியம்-அல்பேர்ட்டா மற்றும் ஒன்ராறியோ தவிர-கனடாவில் மூன்றாவது உயர்வான இடத்தில் கியுபெக்கை வைத்துள்ளது.

ஒன்ராறியோ ஜனவரி 1ல் குறைந்த பட்ச மணித்தியால ஊதியத்தை 14டொலர்களாக உயர்த்தியது. அடுத்த ஜனவரியில் மற்றொரு அதிகரிப்பு- மணித்தியாலம் 15-டொலர்களாக-ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் அல்பேர்ட்டாவின் குறைந்த பட்ச ஊதியம் 15-டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இந்த செய்திகளை அனைவரும் வரவேற்கவில்லை என்பதும் செய்தியாகும்.

சிறு வணிகங்களை இந்த அதிகரிப்பு பாதிக்கும் என தெரியவருகின்றது. சில பகுதிகள் பாதிப்படையலாம். பணியமர்த்தல் திட்டங்கள் ஊழியர் நேரங்கள் அல்லது அதிகரிக்கும் விலைகள் போன்றன. இந்த அதிகரிப்பினால் மாகாணம் பூராகவும் 352,900 ஊழியர்கள்- 214,300 பெண்கள் உட்பட்ட- நேரடியாக நன்மை அடைவர் என கூறப்படுகின்றது. 2016ல் குறைந்த பட்ச ஊதியம் மணித்தியாலத்திற்கு 15டொலர்கள் கோரி கியுபெக்கர்கள் பேரணி நடாத்தினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top