Canada

குறைந்த வருமானம் பெறும் கனடியர்களிற்கு புதிய வருமான வரி தாக்கல் வழி!

இந்த வருடம் குறைந்த வருமானம் பெறும் கனடியர்கள் தங்களது வருமான வரி தாக்கலை தொலைபேசி மூலம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வருமான வரி அமைச்சர் டயான் லெபௌதில்லர் புதிய “File My Return” எனப்படும் ஒரு தானியங்கி சேவை மூலம், குறைந்த அல்லது வருடத்திற்கு வருடம் மாறாத நிலையான வருமானம் கொண்ட கனடியர்கள் தொலைபேசி ஊடாக கேள்வித் தொடர்கள் ஒன்றிற்கு பதிலளிப்பதன் மூலம் தங்கள் வரமான வரி விபர அறிக்கையை சமர்ப்பிக்கலாம் என இன்று அறிவித்துள்ளார்.

குறைந்த அல்லது வருடா வருடம் மாற்றம் பெறாத நிலையான வருமானம் கொண்ட கிட்டத்தட்ட 950,000 கனடியர்கள் இந்த வாய்ப்பை பெறுகின்றனர். பிப்ரவரி நடுப்பகுதியில் புதிய சேவை பெற தகுதியான கனடியர்கள் இது குறித்த தனிப்பட்ட அழைப்பு கடிதங்களை பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்புதிய வழி முறை மூலம் எந்த வித எழுத்து வேலைகள், கணிப்புக்கள் இன்றி அனைத்து விலக்குகள் நன்மைகள் மற்றும் வரவுகளை அணுக முடியும் என கனடா வருமான துறை ஏஜன்சி தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டுகளில் காகித வரி படிவங்கள் மூலம் விண்ணப்பித்தவர்கள் கனடா போஸ்ட், சேவிஸ் கனடா போன்ற இடங்களில் வரி படிவங்களை பெற்றவர்களிற்கு படிவங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். பிசியான வாழ்க்கை வாழும் கனடியர்களிற்கு சில சமயங்களில் வருமான வரி சமர்ப்பித்தல் பெரிய சவாலாக அமைகின்றது.

இவர்களிற்கும், குறைக்கப்பட்ட இயக்கம் கொண்டவர்கள், சேவை இடங்களிற்கு வெகு தூரத்தில் வசிப்பவர்கள் மற்றும் இணைய அணுகல் அற்றவர்கள் போன்றவர்களின் வசதிகளை இலகுவாக்கும் நோக்கத்துடன் இந்த புதிய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசௌகரியங்கள் குறித்து சிபிசி செய்தி நிறுவனம் பல முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top