குளிர் கால பனிக்கட்டி அதிசயமாக மாறிய நயாகரா நீர் வீழ்ச்சி!

கனடாவில் ஆழமான உறை நிலையை உணரக்கூடிய ஒரே இடம் நயாகரா நீர் வீழ்ச்சி என்பதை இன்று உணரக்கூடியதாக காட்சியளிக்கின்றது. தண்ணீர் உறைந்து மரங்கள், நடைபாதைகள், மலை உச்சிகள் எங்கும் வண்ண பூச்சாக சுற்றி பிரகாசமான வெள்ளை நிறத்தில் கனவு காண்கின்றோமோ என நினைக்க வைத்துள்ளது.
பார்வையாளர்கள் எலும்பை நடுங்க வைக்கும் குளிரில் படங்கள் மற்றும் சுய படங்களை எடுத்து இந்த குளிர் கால அதிசய விந்தையுலகத்தை கண்டு களிக்கின்றனர். இது மிகவும் விந்தையானதும் அனைவரது பார்வையையும் கவரக்கூடியதாக காட்சியளிக்கின்றது.
சுற்று புறம் அனைத்தும் உறைந்த நிலையில் மூன்று நீர் வீழ்ச்சிகளும் இயற்கை ஈர்ப்புடன் ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் உறை பனியால் மூடப்பட்டு காட்சியளிக்கின்றது. வீசும் காற்றினால் இயற்கையன்னையின் ஒவ்வொரு அங்குலமும் வெள்ளையால் சுற்றியுள்ளது.