கூட்டமைப்பு வேட்பாளர் உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை இன்று கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம்- பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வைத்து, கடந்த 24 ஆம் திகதி வேட்பாளர் உதயசிறி தாக்கப்பட்டார் என முறைப்பாடு கிடைக்கப்பெற்றமைக்கு அமைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நான்கு பேரிடமும் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் உதயசிறி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.