கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் துப்புரவு!

கேப்பாபுலவில் படையினரால் விடுவிக்கப்பட்ட தமது காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனா்.
கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் 133.4 ஏக்கர் காணிகள் 28 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கேப்பாபுலவு பகுதியில் உள்ள 111.5 ஏக்கர் காணிகளும், சீனியாமோட்டை பகுதியில் உள்ள 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன.
கேப்பாபுலவில் படையினரால் விடுவிக்கப்பட்ட தமது காணிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளனா். கேப்பாபுலவு மக்களுக்கு சொந்தமான காணிகளில் 133.4 ஏக்கர் காணிகள் 28 ம் திகதி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கேப்பாபுலவு பகுதியில் உள்ள 111.5 ஏக்கர் காணிகளும், சீனியாமோட்டை பகுதியில் உள்ள 21.84 ஏக்கர் காணிகளுமாக மொத்தமாக 133.34 ஏக்கர் காணிகள் கையளிக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிரதான வீதி திறந்து விடப்பட்டது. இதையடுத்து மக்கள் தமது காணிகளில் சென்று துப்பரவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.