கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணினுக்கு குவிந்த நிதியுதவி

கனடாவில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணின் மருத்துவ செலவுக்கு நிதி குவிந்து வருகிறது. நாட்டின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர் சப்பிரினா மான்கோன் (18). இவர் கடந்த 25-ஆம் திகதி காரில் சென்று கொண்டிருந்த போது காரானது நீர்மின் துருவத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதோடு அருகிலிருந்த மின்சார கம்பத்தில் இருந்த 14,500 வாட்ஸ் மின்சாரம் சப்பிரினா மீது பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
>இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சப்பிரினா கோமா நிலைக்கு சென்ற நிலையில் பின்னர் நினைவு திரும்பியது. ஆனால், அவரின் கைகள் மற்றும் கால்களை அகற்ற வேண்டிய கட்டாயம் இருந்ததால் மருத்துவர்களை அதனை துண்டித்தார்கள். இன்னும் அவருக்கு சில முக்கிய ஆப்ரேஷன்கள் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் சப்பிரினாவின் மருத்துவ செலவுக்காக அவரின் சகோதரி சமந்தா நிதி வசூலித்து வருகிறார். மொத்தம் 2,00,000 டொலர் நிதியை வசூல் செய்ய சமந்தா முடிவெடுத்துள்ள நிலையில் தற்போது வரை 90,000 டொலர் நிதி வசூலாகியுள்ளது.