Canada

கொலை வழக்கில் தள்ளிப்போகும் தீர்ப்பு: காரணம் என்ன?

கனடாவில் காணாமல் போன பள்ளி மாணவரை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வெளியாகும் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று Winnipeg பள்ளி மாணவரான 17 வயது Cooper Nemeth காணாமல் போனார், பின்னர் அவர் Bell-Wright என்னும் 23 வயதுள்ள ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இவ்வழக்கில் தீர்ப்பு வர இருந்த நிலையில் திடீரென தீர்ப்புத் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிரதமர் Stephen Harper, Canadian Victims Bill of Rights என்னும் மசோதாவைக் கொண்டு வந்தார். அதன்படி ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்பவர் நேரடியாக பாதிக்கப்பட்டவராக மட்டுமில்லாமல் குற்றத்தின் விளைவினால் மன ரீதியாக பதிக்கப்பட்ட யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

இந்த மசோதாவின் அடிப்படையில், ஹாக்கி வீரரான Cooper Nemethஇன் கொலையால் பாதிக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் உட்பட 96 பேர் அறிக்கை கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கான அமைப்பான MOVA என்னும் அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான Karen Wiebe, ” ஒரு கொலைக்காக 96 பேர் அறிக்கை கொடுத்திருப்பார்களென்றால், 96 பேர் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களென்று அர்த்தம், குற்றவாளியிடம், அவன் செய்த செயல் மற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறதென்று முகத்திற்கு நேராக சொல்வதற்கு இது ஒரு வாய்ப்பு, அது மிகவும் முக்கியமானதும்கூட” என்று தெரிவித்தார்.

ஜனவரி 15 ஆம் திகதி இவ்வழக்கிற்கு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பாதிக்கப்பட்டோரின் அறிக்கைகளால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Nemethஇன் தாயான Gaylene கூறும்போது ”அவன் ஒரு இளைஞனைக் கொன்றுவிட்டான், வலி என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும், வெறும் சிறைத்தண்டனை, மற்றவர்களுக்கு எவ்வளவு வலி ஏற்பட்டிருக்கிறது என்பதை அவனுக்கு கற்றுத்தர முடியாது” என்று கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top