News

கோடரித் தாக்குதல்; 3 வயது குழந்தை பலி; தாய் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் தனது தாயாரையும், தம்பியின் மூன்றே வயதான மகளையும் கோடரியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளது.

குறித்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட நபர், நஞ்சருந்தி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் யாழ் வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குழந்தை உயிரிழந்துள்ளதுடன், குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று (19) காலை குறித்த வீட்டில் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடரியால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் தாய் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஈஸ்வர், நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் தனுசன் நிக்சையா (03) எனும் குழந்தையும் சந்தேகநபரான ஈஸ்வர் (33) என்பவருமே உயிரிழந்துள்ளனர். பரமேஷ்வரி (55) என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சிறுமி! காரணம் வெளியானது

குடும்ப தகராறு காரணமாகவே, யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது. எனினும், பணப் பிரச்சினை காரணகவே இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதென உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்கொலை செய்துகொண்டவர், குறித்த தாயின் மூத்த மகன் எனவும், இவர் தனது மகள் முறையான சகோதரனின் மகளையும், தாயையும் கொடூரமாக வெட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாகவே,சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளதாகவும், பணம் கொடுக்காத காரணத்தினாலேயே சிறுமியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்ததாக கூறப்படும் நபர் வீட்டிற்கு வருவதில்லை எனவும், எப்போதாவது ஒரு சந்தர்ப்பதில் வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டையிடுவார் என அயல்வர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சம்பவம் இடம்பெற்றமைக்கான உறுதியான காரணங்களை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top