Canada

சிக்கன கடையில் வாங்கிய Q-tip பெட்டிக்குள் 1,800டொலர்கள் பெறுமதியான நகைகள்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் லொசெட்ட சிம்ஸ் என்பவர் 50-சதங்களிற்கு ஒரு சிறிய Q-tip அடங்கிய பெட்டி ஒன்றை ஒரு சிக்கன கடையில்-பெரும்பாலும் பாவித்த பொருட்களை விற்கும் thrift store- வாங்கியுள்ளார்.

தனது வீட்டின் யன்னல்களை பருத்தி சுழலியால் துப்பரவு செய்யும் திட்டத்துடன் வாங்கினார். ஆனால் நடந்தது வேறுவிதமாக. அவர் கொண்டு சென்றது- 1,800டொலர்கள் மதிக்கத்தக்க நகை சேகரிப்புக்கள்- இவரது உள்ளங்கை அளவிலான அப்பெட்டிக்குள் இருந்தன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் டன்கான் என்ற இடத்தில் உள்ள Cowichan Hospital Auxiliary Thrift Store இதனை வாங்கினார். எட்டு மோதிர செட்கள் டயமன்ட், மரகதம், மற்றும் மாணிக்கம் பதிக்கப்பட்ட- ஒரு டயமன்ட நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் உண்மையான முத்துக்கள் கொண்ட சரம் போன்றவை அச்சிறிய பெட்டிக்குள் இருந்தன.

மறு யோசனை இன்றி சிம்ஸ் பெட்டியை மூடி விட்டு 20கிலோ மீற்றர்கள் பயணம் செய்து திரும்ப அதே கடைக்கு சென்று அவற்றை திரும்ப கொடுத்து விட்டார். கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் மனிதனொருவர் மறைந்த தனது சகோதரியின் சேர்க்கையில் இருந்த நகைகளை கொடுத்துள்ளார் என தெரியவந்தது. அனைத்தும் மீண்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டது. கடையில் கிடைக்கும் வருமானம் வைத்தியசாலை நோயாளிகளின் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top