சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன”: ஜனாதிபதி

“பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு சிறைக் கதவுகள் திறந்திருக்கின்றன” என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
வெல்லவாயவில் இன்று (19) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2008ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றிருக்கும் பிணைமுறி மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபா நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தக் கைங்கரியத்தில் பங்களிப்புச் செய்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.