News

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லட்சம் கோடிக்கு அதிபதியான இளவரசர்: சவுதி அரசு ஏற்க மறுப்பு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இளவரசர் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு நன்கொடையாக அளிக்க ஒப்புதல் தெரிவித்த போதும், அரசு ஏற்க மறுத்துள்ளது. சவுதியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களிடமிருந்து சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாயை மீட்டு, அவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து நவம்பரில் சிறைபிடிக்கப்பட்ட இளவரசர் அல்வாலீத் பின், தமது சொத்தில் கணிசமான பங்கினை அரசுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றும், றிப்பிட்ட தொகையை அரசுக்கு நன்கொடையாக அளிக்க ஒப்புதல் தெரிவித்த போதும் அரசு அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் போர்ப்ஸ் இதழ் புள்ளிவிவரத்தின் படி அல்வாலீத் பின்னின் சொத்துமதிப்பு 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top