Canada

சுடுகாட்டில் மாறி போன பெண்ணின் சடலம்!

கனடாவில் உள்ள சுடுகாட்டில் பெண்ணின் சடலம் இருமுறை மாறியதால் அவர் குடும்பத்துக்கு பதிலாக வேறு குடும்பத்தார் சடலத்தை எரித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் தான் இச்சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது, சாண்ட்ரா பெனிட் (65) என்ற பெண் டிசம்பரில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இதையடுத்து அவரின் சடலத்தை எரிப்பதற்காக தனியார் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்குள்ள ஊழியர்களிடம் சாண்ட்ராவின் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பின்னர் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது தான் அது சாண்ட்ராவின் சடலம் கிடையாது என அவரின் கணவர் கேரி கண்டுப்பிடித்தார். பின்னர் மீண்டும் வேறு சடலம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதுவும் சாண்ட்ராவின் சடலம் கிடையாது என தெரியவந்தது.

இது குறித்து சாண்ட்ராவின் உறவினர்கள் சுடுகாட்டு ஊழியர்களிடம் விசாரித்த போது வேறு குடும்பத்தினர் மாற்றி சாண்ட்ராவின் உடலை எரித்து விட்டதாக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் அவர்களுடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

சாண்ட்ராவின் உடலை தனது தாயின் உடல் என நினைத்து எரித்த நபர் கூறுகையில், இந்த தவறுக்காக சாண்ட்ரா குடும்பத்துக்கு எனது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இது குறித்து மாகாண அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுடுகாட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் கூறுகையில், சம்பவம் குறித்து கருத்து கூற வேண்டாம் என உரிமையாளரிடம் கூறியுள்ளேன். ஆனால் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்துள்ளோம் என கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top