Canada

சுனாமி கனடாவின் மேற்கு கரையோர பகுதியை தாக்கலாம்? வெளியான அபாய அறிவிப்பு….

கனடாவின் மேற்கு கரையோரப்பகுதியை “பெரிய ஒன்று” தாக்கலாம் என்ற அச்சுறுத்தல் வருடங்களாக இருந்து வருகின்றது. சக்தி வாய்ந்த 9.0 அளவிலான பூகம்பம் பசுபிக் கடற்கரை வழியாக கிழித்தெறியும் எனவும் ஆயிரக்கணக்கானவர்களை கொல்வதுடன் சுனாமி அலைகள் 20மீற்றர்கள் உயரத்தில் எழும்பும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அழிவுகரமான பூகம்பம் கடைசியாக 1700 ஜனவரி 27ல் நடந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர்க்கமுடியாததெனவும் கரையோர பகுதியை ஒன்று தாக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

1700ல் ஏற்பட்ட பெரிய பூகம்பம் யு.எஸ்சிலிருந்து யப்பான் வரை சென்றதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் தகவல் பிரகாரம் தெரியவந்துள்ளது. மீண்டும் எப்போது நடக்கும் என்பதை கணிப்பது கடினம். கடந்த 10,000வருடங்களில் 20தடவைகள் நடந்துள்ளன என சைமன் விரேசர் பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் டாக்டர் ஜோன் கிளேக் தெரிவிக்கின்றார்.

“பெரிய ஒன்று” என்றால் என்ன? கற்பனையான அளவு-9.0 பூகம்பம் Cascadia Subduction Zone-குவி தட்டு எல்லை எனப்படும்-வன்கூவர் ஐலன்டின் வட பகுதியிலிருந்து கலிபோர்னியாவின் வடபகுதி வரை நீண்டிருக்கும் 1000கிலோ மீற்றர்கள் அளவிலான பகுதியில் ஏற்படலாம் எனவும் இதுவே “பெரிய ஒன்று” என கூறப்படுகின்றது. இத்தகைய ஒன்று 1700ல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

3,500வருடங்களில் ஏழு தடவைகள் ஏற்பட்டுள்ளது.ஒவ்வொன்றும் 400 முதல் 600 வருடங்கள் இடைவெளியில். மீண்டும் எப்போது வரும்? அடுத்த 200வருடங்களிற்குள் நடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த 50வருடங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 12சதவிகிதம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என பிரிட்டிஷ் கொலம்பியா ஆடிட்டர் ஜெனரல் காரியாலய கூற்றுபிரகாரம் தெரியவந்துள்ளது.

வன்கூவர் ஐலன்டின் மேற்கு கரையோரம் மற்றும் பசுபிக் கரையோரமாக யு.எஸ்.மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.அது மட்டுமன்றி சுனாமி மற்றும் பூகம்பம் விக்டோரியா மற்றும் வன்கூவர் பகுதிகளிலும் உணரப்படும் என கிளேக் தெரிவிக்கின்றார்.

கனடா ஆயத்தமா?

நூற்றாண்டுகளில் கனடா இந்த அளவிலான ஒரு பூகம்பத்தால் உலுக்கப்படவில்லை ஆகையால் முற்றாக ஆயத்தமாக இருப்பது கடினம் எனவும் கிளேக் தெரிவித்தார். ஆனாலும் மக்களை எச்சரிக்கையாக இருக்க செய்வதற்கு தேவையான சிறந்த வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். 2011ல் யப்பானில் ஏற்பட்ட 9.0அளவு பூகம்பம் குறைந்தது 15,000 உயிர்களை பலி கொண்டதுடன் அரை மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.

இந்த பூகம்பம் சக்தி மிக்க சுனாமிக்கு வழிவகுத்தது. கடற்கரை ஓரங்களில் அலைகள் 40மீற்றர்கள் உயரத்தை எட்டி நகரம் முழுவதையும் அழித்ததுடன் உலகின் மிக மோசமான அணு பேரழிவுகளையும் ஏற்படுத்தியது. இந்து சமுத்திரத்தில் 2004ல் இடம்பெற்ற சுனாமியால் கால் மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். நவீன வரலாற்றில் மிக பயங்கரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக அமைந்தது. தற்போது கனடாவும் ஆயத்தமாவதற்கு தன்னாலான சிறந்த முயற்சிகளை செய்கின்றதெனவும் கிளேக் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top