சுவிட்சர்லாந்தின் அழகிய வெனிஸ் நகரம்! வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்

சுவிட்சர்லாந்தின் St Ursanne நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் அழகிய வெனிஸ் நகராக காட்சியளிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Doubs ஆற்றின் கரை உடைந்ததால் St Ursanne நகர் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நகரை சூழ்ந்துள்ள வெள்ளநீரை தீயனைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், டஜன் கணக்கான தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்களின் உதவியுடன் வெளியேற்றி வருகின்றனர். இதற்கு முன்பு இம்மாத தொடக்கத்தில் கனமழையின் காரணமாக Doubs ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு இடுப்பளவு தண்ணீர் நகருக்குள் நுழைந்தது.
இப்பொது மீண்டும் இரண்டாம் முறையாக வெள்ளம் வந்துள்ளதால் வீட்டுக்குள் தண்ணீர் சூழ்ந்து வெனிஸ் நகரம் போல் காட்சி அளிப்பதாக அங்கு வசிப்பவர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெள்ளபெருக்கு காரணமாக மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன, சில இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர், வெள்ளத்தின் காரணமாக உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.