News

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்! – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவடைய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என அறிவிக்குமாறு ஜனாதிபதியால் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது.

1978ம் ஆண்டு அரசியலமைப்புக்கு அமைய, 2015ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதாகவும், எனவே தனது பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் எனவும், எனினும் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதி ஒருவரின் பதவிக் காலம் 5 வருடங்கள் என மாற்றப்பட்டுள்ளதாகவும், மைத்திரிபால சிறிசேனவால் உயர்நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்து. இக்கோரிக்கைகான முடிவாகவே உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவடைய வேண்டும் என தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் மூலமே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top