News

ஜேர்மனியில் வீசும் கடும்புயலால் 8 பேர் பலி

ஜேர்மனியில் வீசும் கடுமையான புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாகன ஓட்டுநர்கள் அதிக இடையூறுகளுக்கு ஆளாகிறார்கள், இதுவரை புயல் காரணமாக ஏற்பட்ட விபத்தால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, புயல் போலந்து நாட்டிற்கு கடந்துள்ளது, 140km – க்கு புயல் வீசுகிறது. சாலையில் நடந்து செல்பவர்கள் தூக்கி வீசப்பட்டு விபத்திற்கு ஆளாகிறார்கள். 65,000 வீடுகளிள் மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யாரும் வெளியூர்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்படி வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிவேக புயலால், ஜேர்மனியில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, North Rhine-Westphalia பகுதியில் நெடுதூர ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன, குறுகிய பயணம் கொண்ட ரயில்களின் வேகம் புயலால் குறைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், மரங்கள் விழுந்து விபத்துக்களை சந்திக்க நேரிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அதிகமான டுவிட்டர்வாசிகள் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top