தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பூர்வாங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கூடிய விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். திருப்பூர் மாணவர் சரத்பிரபு மரணம் மிகவும் துன்பமான, துயரமான சம்பவம். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார.