News

”தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம்” பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர்

தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம் என்று இங்கிலாந்து பிரதமர் டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அவர் பேச துவங்கும் முன் தமிழில் வணக்கம் என்று சொல்கிறார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். இங்கிலாந்து வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளனர். தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம். வரும் ஆண்டு அவர்களுக்கு சிறப்பாக அமையட்டும்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious year ahead. Iniya Thai Pongal Nalvazhthukkal.” – Prime Minister Theresa May pic.twitter.com/fWnUus4Wip

— UK Prime Minister (@Number10gov) January 14, 2018

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top