Canada

தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்திய பிரித்தானிய, கனேடிய பிரதமர்கள்

தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வான தைப் பொங்கல் திருநாளை முன்னி்ட்டு பிரித்தானிய பிரதமர் திரேசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ருடோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளமை சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சா்வதேச தலைவா்கள் தைப் பொங்கல் நிகழ்வை முன்னிட்டு வெளியிட்டு வரும் வாழ்த்துச் செய்திகள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் விருப்பங்கள், உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டமைந்தது என கூறப்படுகின்றது.

அந்த அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பிரித்தானிய, கனேடிய பிரதமா்கள் வெளியிட்ட தைப் பெங்கல் வாழ்த்துச் செய்திகளும் முக்கியத்துவம் பெறுவதாக தமிழ் உணா்வாளர்கள் கூறியுள்ளனர்.

தமிழ் மக்களின் பாரம்பரியம் மற்றும் இந்த மாதத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை கற்றுக்கொள்வதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என கனேடிய பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தைப் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் கனடாவின் அனைத்து மக்களையும் பங்கேற்று அதனை வலுப்படுத்துமாறும் அவா் வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று தமிழர்களின் பாரம்பரிய கலை பண்பாடுகளுக்கு மதிப்பளிப்பதாக பிரித்தானிய பிரதமர் திரேசா மே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளாா்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top