தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு ஆமைஓடுகள்….!

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எதிர்பார்த்த அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எதிர்பார்த்த அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என எதிர்பார்த்த அரசியல் தலைமைகள், அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் ஏ9 பிரதான வீதிக்கும் அருகில் தொடர்ச்சியாக 329வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தலைமைகள், அரசுக்கு நெருக்கடிக்கு ஏற்படுகின்ற போது அல்லது அரசுக்கு ஆதரவு தேவைப்படுகின்ற போது நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வருகின்றனர். நாட்டிற்குள் மட்டுமன்றி நாட்டிற்கு வெளியே சென்றும் தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு ஆதரவு திரட்டுகின்றனர். தங்களை வீதியில் விட்டவர்கள் இன்று வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேதனை வெளியிட்டுள்ளனர்.