News

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்ஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என கோரி கூட்டமைப்பினர் கடிதம் தருவார்களாயின் அதனை தான் ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ள நிலையில் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்? அந்தத் தடையை அரசு நீக்க வேண்டுமென அங்கஜன் பகிரங்கமாக கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்ஜன் இராமநாதன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின் நான் அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தயார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top