தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான காணொளி தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான சிசிடி பதிவு தற்பொழுது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றில் செய்தி ஆசிரியராக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் பணியாற்றி வருகின்றார். இன்று பிற்பகல் குறித்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர், அவரை கத்தியால் குத்த முயற்சித்த நிலையில் சக ஊழியர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். எனினும் கத்தி குத்து தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த நபர் தப்பிச்செல்ல முட்பட்ட போது, அவரை மடக்கிப்பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸில் ஒப்படைத்துள்ளதாகவும் செய்தியாளர் குறிப்பிட்டார்