Canada

தவறான முறையில் IVசெருகியதால் படுகாயமுற்ற 3-வயது சிறுமி!

எச்சரிக்கை: இச்செய்தியில் அடங்கும் படங்கள் கலக்கத்தை ஏற்படுத்தலாம்.

எட்மன்டனை சேர்ந்த தாய் எட்மன்டன் சிறுவர் வைத்தியசாலையின் அலட்சியத்தை குற்றம் சாட்டியுள்ளார். இவரது மூன்று வயது மகளின் கையில் தவறான முறையில் செருகப்பட்ட IV லைன் சிறுமிக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியமை இக்குற்றச்சாட்டிற்கு காரணமாகும்.

இந்த வார ஆரம்பத்தில் ஜலெனா குந்தரின் மகள் எமிக்கு குறிப்பிட்ட வைத்திய சாலையில் திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவளிற்கு வெள்ளிக்கிழமை இரவு நரம்புவழி திரவங்கள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தனது மகள் தொந்தரவு செய்யவும் அழவும் தொடங்கியதாக தெரிவித்தார். நரம்பு வழியாக திரவம் செலுத்தப்பட்டபின்னர் இவ்வாறு நடந்துள்ளது. ஆனால் எவரும் கவலை கொண்டதாக தெரியவில்லை

மகளுடன் வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை இரவு தங்குவதற்கு தனது தாயாரை ஒழுங்கு செய்து விட்டு பல நாட்கள் ஓய்வு இல்லாததால் சிறிது ஓய்வெடுக்க சென்றுள்ளார். ஒரு மணித்தியாலங்களின் பின்னர் தாயார் நிலைமை சரியில்லை என உரை செய்தி அனுப்பியுள்ளார். அடுத்த நாள் காலைவரை எதுவும் தெரியவில்லை. பின்னர் ஐவி லைன் நரம்பை விட்டு வழுக்கி தோலிற்குள் சென்றிருப்பதை தாதி கண்டுபிடித்தார். சிறுமியின் கை வீங்கியதுடன் கொப்புளங்களால் மூடப்பட்டுவிட்டது.

அன்றய இரவு மூன்று வெவ்வேறு தாதிகள் எமியின் அறைக்கு வந்தனர் என்றும் அனைவரும் இச்சம்பவத்தை தவறவிட்டு விட்டனர் எனவும் குந்தர் முகநூல் இடுகையில் குற்றம் சாட்டியுள்ளார். தாதிமாரின் அலட்சியத்தை குற்றம் சாட்டியுள்ளார் ஏனெனில் எவரும் எமியின் ஐவி உட்செலுத்திய பகுதியை சரியாக கவனிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனது மகளின் கையில் ஏற்பட்ட பாதிப்பை சரிப்படுத்த மேலதிக சத்திர சிகிச்சை தேவைப்படும் என எட்மன்டன் சிரிவி செய்தியில் தெரிவித்தார்.

கையின் முழுச்செயல்பாட்டையும் திரும்ப எமி பெறுவாளா என்பதும் தெளிவில்லை எனவும் கூறினார். எமி மரபணு கோளாறு கொண்டவள் என்பதால் சைகை மொழி மூலம் தொடர்பு கொள்பவள். கையை முழுமையாக உபயோகிக்காவிட்டால் பேச்சுதன்மையும் தொடர்புகொள்ளும் தன்மையும் குறைவடையலாம். தனது பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த பிள்ளைகளிற்கும் ஏற்படக்கூடாதென தான் விரும்புவதாக குந்தர் கவலையுடன் தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top