Canada

துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி சிறுவன்:

கனடா Vancouverஇல் இரண்டு கோஷ்டிகளிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். ஏற்கனவே பல குற்றச்செயல்களில் தொடர்புடைய Kevin Whiteside என்ற 23 வயது இளைஞரைக் குறிவைத்து இன்னொரு கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது, அவரும் திரும்ப சுட்டார்.

இந்நிலையில் தனது பெற்றோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்தது. அபாய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவனுக்கு பல மணி நேரம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவந்தது. திங்கட்கிழமை மதியம் அவன் உயிரிழந்தான்.

அவனது இறப்புக்கு Vancouver மேயர் Gregor Robertson தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இறந்த சிறுவன் சார்ந்த Coquitlam Christ Church of Chinaஇன் Pastor ஆகிய Caleb Choi இறந்த சிறுவனின் குடும்பமே துயரத்தில் மூழ்கியுள்ளதாகவும் சோர்ந்து போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சிறுவன் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு தம்பதியினர் பூங்கொத்து ஒன்றை வைத்துச் சென்றனர்.

குறி வைக்கப்பட்ட Kevin Whitesideஉம் உயிரிழந்தான். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top