News

தென்ஆப்ரிக்கா: பயணிகள் ரெயில் விபத்தில் 14 பேர் பலி – 180 பேர் காயம்

தென்ஆப்ரிக்கா நாட்டில் பயணிகள் ரெயில் லாரியுடன் மோதிய விபத்தில் 14 பேர் பலியானதாகவும், 180-க்கு மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்ஆப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் இருந்து ஜோகன்னஸ்பர்க் நகருக்கு பயணிகள் ரெயில் இன்று புறப்பட்டு சென்றது. ஹென்னென்னன் – க்ரூன்ஸ்டாட் வழியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் உள்ளது.

இந்த பகுதியை ரெயில் அடைந்தபோது, தண்டவாளத்தை லாரி ஒன்று கடக்க முயன்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த பயணிகள் ரெயில் அந்த லாரி மீது மோதியது. இதில், பயணிகள் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. சிறிது நேரத்தில் ரெயில் பெட்டிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கின.

இந்த விபத்தில் 14 பயணிகள் பலியாகி உள்ளனர் என்றும், 180-க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தகவலறிந்ததும், மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top