ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தேர்தல்கள் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தேர்தல் விதிமுறைகளை மீறி விஜயகலா மகேஸ்வரனின் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாநகரசபை வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டமை, தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டியமை, மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவர்மீது முறைப்பாடு மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.