நடுவானில் பலமாக குலுங்கிய மலேசிய விமானம்: உயிர் பயத்தில் அலறிய பயணிகள்

நடுவானில் திடீரென்று பலமாக குலுங்கிய விமானத்தால் பயணிகள் செத்து விடுவோமோ என அஞ்சி பயத்தில் அலறிய சம்பவம் நடந்துள்ளது. நடுவானில் குலுங்கிய அந்த விமானத்தின் பயணிகள் பயத்தில் அலறியதுடன் கண்ணீர் விட்டு செபத்திலும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் என்ன செய்வதென்று அறியாத விமான ஊழியர்கள் பயணிகளை தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள கெட்டியாய பிடித்துக் கொள்ளுங்கள் என குறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த களேபரங்களுக்கு இடையே ஒரு பயணி, நாம் விபத்தில் சிக்க இருக்கிறோமா அல்லது அவசரமாக தரை இறங்கப் போகிறோமா என்ற கேள்விக்கு குறித்த மலேசிய விமான ஊழியர் ஒருவர், தமக்கு எதுவும் தெரியாது என பதிலளித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்ட MH122 விமானம் பாதிவழியில் பயங்கரமாக குலுங்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
8 மணி நேரம் கொண்ட இந்த பிரயாணத்தின் நடுவே விமானத்தின் எந்திரம் கோளாறில் சிக்கியதால் விமானிகள் அவசரமாக தரையிறக்கியுள்ளனர். 224 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் Broome நகரின் மீது பறந்த போதே மிகவும் சத்தமுடன் சக்தியாக குலுங்கியுள்ளது. தொடர்ந்து 30 நிமிடங்கள் தங்கள் உயிரையே கையில் பிடித்துக் கொண்டு இருந்ததாக குறித்த விமான பயணிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அனைத்தும் கட்டுக்குள் உள்ளது, பயணிகள் எவரும் கவலை கொள்ள வேண்டாம் என விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே குறித்த விமானம் Alice Springs விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.