News

நைஜீரியா: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் – 11 பேர் பலி

வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மசூதியில் இன்று நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

காமரூன் நாட்டு எல்லையோரம் அமைந்துள்ள வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் கம்போரு பகுதியில் அமைந்துள்ள மசூதியில் இன்று அதிகாலை தொழுகை நடைபெற்றது.

அப்போது அங்கு நுழைந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன், தான் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் இதில் சிக்கி பலியானதால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆனது.

இந்த தாக்குதலில் மசூதி கட்டிடம் முழுவதும் எரிந்து சேதமானது. மசூதிக்கு அருகில் உள்ள சில கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த நவம்பரில் மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top