Canada

பாலியல் துன்புறுத்தல்கள் மாபெரும் பிரச்சினையாகி விட்டன: கனடா பிரதமர் .

பாலியல் துன்புறுத்தல்கள் பெரிய பிரச்சினையாகி விட்டன, பெண்கள் இது குறித்து பேச முன்வரும் போது அவர்களுக்கு செவிசாய்ப்பது நமது கடமை என்று கனடா பிரதமர் Justin Trudeau கூறினார். திங்களன்று நாடாளுமன்றம் கூட உள்ளதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கெடுப்பதற்குமுன் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதாரம் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் அவர் பேசினாலும் அரசியல் வட்டாரங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த செய்தியே மேலோங்கி இருந்தது. நாம் எப்போதுமே பெண்களுக்கு ஆதரவாக இருப்போம், நான் ஏற்கனவே டாவோசில் கூறியதுபோல MeToo, Time’s Up, the Women’s March ஆகியவை சமூக மாற்றங்களுக்கான பிரச்சாரங்களில்லை, இது ஒரு இயக்கம், இந்த இயக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

இத்தகைய விடயங்கள் இப்போது பேசப்படுவதற்கான முக்கிய காரணம், கடந்த வாரம் Ontario Progressive Conservative தலைவர் Patrick Brown மற்றும் பிரதமர் Justin Trudeauவின் கேபினட் அமைச்சர்களில் ஒருவரான Kent Hehr ஆகியோர் பாலியல்குற்றச்சாட்டுகளை அடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததேயாகும். விளையாட்டு மற்றும் இயலாமை துறைகளின் அமைச்சராக இருந்த Kent Hehr Albertaவில் MLAவாக இருந்தபோது தன்னிடம் தவறாக பேசியதாக ஒரு பெண் புகாரளித்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதேபோல் இன்னொரு பெண்ணும் Kent Hehr தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். Kent Hehr ராஜினாமா செய்துள்ளதை அறிவித்த பிரதமர், அவர் மீதான புகார்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். திங்களன்று நாடாளுமன்றம் கூடும்போது, நாடாளுமன்றம் உட்பட அலுவலகங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கெதிரான புதிய விதிகளை நடைமுறைப்படுத்தவுள்ள Bill C-65 என்னும் மசோதாவின் மீதான வாதங்கள் நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top