பிளாஸ்ரிக் பைகளை தடை செய்யும் முதலாவது கனடிய நகரம்!

மொன்றியல் தனது நீண்ட கால திட்டமான பிளாஸ்ரிக் பைகளின் தடையை 2018ல் நடைமுறை படுத்தியுள்ளது. ஜனவரி 1 திங்கள்கிழமை இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு செய்யும் முதலாவது முக்கிய கனடிய நகரம் இதுவாகும். பலசரக்கு கடைகளில் மரக்கறிகள் மற்றும் பழவகைகளை பணம் செலுத்தும் பகுதிக்கு கொண்டு செல்லும் அல்லது இறைச்சி வகைகளை சுற்றும் மெல்லிய பைகளிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொலைக்கப்படும், கைவிடப்படும் அல்லது வீசி எறியப்படும் பிளாஸ்ரிக் பைகளினால் குறிப்பிடத்தக்க கெடுதிகள் நிலப்பரப்புக்கள் மற்றும் கடல் சூழ்ந்த அமைப்புக்களிற்கு தீங்கு விளைவிப்படதுடன் முடிவில் குப்பைத்தொட்டிகள் நிறைந்த நிலப்பரப்புகளில் முடிவடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கிட்டத்தட்ட 2-பில்லியன் பைகளை வருடந்தோறும் உபயோகிப்பதாகவும் இவற்றில் 14சதவிகிதம் மட்டுமே மறு சுழற்சி ஆலைகளில் மறு ஒருங்கிணைப்பு செய்யப்படுவதாகவும் மொன்றியல் நகர கவுன்சில் சுற்று சூழல் பொறுப்பு அங்கத்தவர் தெரிவித்துள்ளார். இது குறித்த சலுகை காலம் ஆறுமாதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
யூன் மாதம் 5ந்திகதிக்கு பின்னர் முதல் குற்றத்திற்கு தனியொருவருக்கு 1,000டொலர்கள் அபராதமும் நிறுவனம் ஒன்றிற்கு 2,000டொலர்களும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்கூவரில் 2018 யூலையில் இத்தடை அமுல்படுத்தப்படலாம். ரொறொன்ரோ 2012ல் முயன்று தோல்வியடைந்துவிட்டது.