Canada

பிள்ளைகளிற்காக வீட்டு முற்றத்தில் பனி கப்பல் கட்டிய கனடிய தந்தை!

குளிர் காலத்தில் பெரும்பாலான குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளிற்காக பனி மனிதன் அல்லது பனிக்கோட்டை போன்றவற்றை செய்வார்கள் ஆனால் அல்பேர்ட்டா றெட் டீரை சேர்ந்த லட்சிய தந்தை ஒருவர் ஒரு படி மேலே சென்று தனது பிள்ளைகளிற்காக வீட்டு முற்றத்தில் பெரிய பனிக்கப்பல் ஒன்றை கட்டியுள்ளார். இக்கப்பலை உருவாக்குவதற்கு இவருக்கு 3-வாரங்கள் மற்றும் கிட்டத்தட்ட 250 ஐஸ் கட்டிகளை-ஒவ்வொன்றும் 25-கிலோ கிராம்களிற்கும் அதிகம்- தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் எடுத்துள்ளார்.

இந்த வருடம் சிறிது வித்தியாசமாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கப்பலை செய்ததாக தெரிவித்துள்ளார். குளிர் காலம் உண்மையிலேயே பிள்ளைகளிற்காக அற்புதமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதாவும் தெரிவித்தார். இரவில் கப்பலின் தெளிவான பனிக்கட்டி ஒளிபெற்று அசையும் நீல ஒளியுடன் கூடி கடல் அலைகளை பிரதிபலிக்கும். அடுத்த வருடம் எத்தகைய பனிச்சிற்பத்தை உருவாக்க போகின்றார் என அயலவர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். இது ஒரு ஆச்சரியம் பொறுத்திருந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top