News

பேராதனை பல்கலைக்கழக இரு பீட மாணவர்களுக்கிடையில் மோதல் : இருவர் வைத்திய சாலையில் அனுமதி

பேராதனை பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களுக்கிடையிலான மாணவர்களுக்கிடையில் இன்று முற்பகல் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பகிடி வதை காரணமாக விஞ்ஞான பீட மாணவர்களுக்கும் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் இடையில் பல்கலைக்கழக றகர் விளையாட்டு மைதானத்திலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோதலில் விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

குறித்த மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Share2
TAGS

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top