News

போலி பிரித்தானியா பாஸ்போர்ட்கள் தயாரித்து விற்ற கும்பல் கைது .

பிரித்தானியாவில் போலி கடவுச்சீட்டுகள், போலி பல்கலைகழக பட்டங்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்த 7 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலுக்கு ஸ்டீவன் கனவெண்டி (39) என்பவர் தான் தலைவராக செயல்பட்டுள்ளார். அதன்படி போலியாக தயாரிக்கப்பட்ட பிரித்தானியா கடவுச்சீட்டு ஒன்றை £800-க்கும், பல்கலைகழக பட்டத்தை £200-க்கும், பிரித்தானிய வசிப்பிட பெர்மிட்-ஐ £600-க்கும் இந்த கும்பல் விற்பனை செய்து வந்துள்ளது.

பிரித்தானியாவில் புகலிடம் கோரி வரும் மக்கள் சட்டவிரோதமாக அங்கு தங்குவதற்கு உதவவே இந்த காரியத்தில் ஸ்டீவன் தலைமையிலான மோசடி கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரகசியபிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவர் ஸ்டீவனிடம் வாடிக்கையாளர் போல சென்று கடவுச்சீட்டு வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது ஸ்டீவன் அதிகாரியிடம் ஆவணத்தை கொடுக்கும் போது அதை உடனிருந்த அதிகாரிகள் வீடியோவாக எடுத்த நிலையில் ஸ்டீவன் உள்ளிட்ட ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் ஸ்டீவனுக்கு 40 மாதங்கள் மற்றும் இரண்டு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்துல் அஜீசா (58) என்ற முன்னாள் கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இவர் வீட்டில் தான் போலி ஆவணங்கள் தயாராகியுள்ளது. போலி ஆவணங்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்த அல்பெர்ட் அடிகோயா (47) என்பவருக்கு 40 மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறையும், ஸ்டீவனுக்கும் அடிகோயாவுக்கும் இடையே தரகர் போல செயல்பட்ட விக்டருக்கு (53) 3 ஆண்டுகள் சிறை தண்டணையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய லுக் நிகண்டா (29)-வுக்கு 16 மாதங்கள் சிறை தண்டனையும், பவுல் கனவெண்டி (37)-க்கு 9 மாதம் சிறையும், மடாலிட்சோ மஜாவா (33)-வுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top