News

மஹிந்த ராஜபக் ஷவை சிறையிலடைப்போம்.!

ஜன­வரி 8 போராட்­டத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். ஜனா­தி­ப­தியின் பேச்சை கணக்­கெ­டுக்க வேண்டாம். இது தேர்தல் கால­மாகும். எதிர்வரும் 10 ஆம் திக­திக்கு பின்னர் நல்­லாட்சி அர­சாங்­கத்தை இதனை விட பல­மாக 2025 ஆம் ஆண்டு வரை கொண்டு செல்வோம். மக்கள் வழங்­கிய ஆணையை மீண்டும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு காட்­டிக்­கொ­டுக்க மாட்டோம் என சுகா­தார, சுதேச வைத்­தியத்துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இது மொட்டு சின்­னத்­திற்கு மீண்டும் ஆட்­சியை வழங்­கு­வதா அல்­லது முன்­னெ­டுத்து செல்­வதா என்­ப­தனை தீர்­மா­னிக்கும் தேர்­த­லாகும்.2018 ராஜ­பக்ஷ குடும்­பத்தை வெலி­கடை சிறையில் அடைக்கும் வரு­ட­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார். கேகா­லையில் நேற்று நடைப்­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஜன­வரி 8 ஆம் திகதி செய்த அர்ப்­ப­ணிப்பு அனை­வ­ருக்கும் தெரியும். இந்த போராட்டம் சாதா­ர­ண­மல்ல. தோற்றால் நிலத்­திற்கு கீழ் சென்­றி­ருப்போம். எனினும் உறு­தி­யான தீர்­மா­னத்தை எடுத்தோம். அர­சி­யலில் இருந்து விலக வேண்டும் அல்­லது ராஜ­ப­க்ஷ­விடம் இருந்து விலக வேண்டும் என்ற நோக்­கத்­து­டனே இருந்தோம். இர­க­சிய பேச்­சு­வார்த்­தையின் மூலமே போராட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டிக்க முடி­யாது என்று பல­ரிடம் இருந்து தொலை­பேசி அழைப்பு வந்­தது. பிர­த­ம­ருடன் இணைந்து இந்த அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான போராட்­டத்தை முன்­னெ­டுத்தோம்.

துதூ­வர்­களும் மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டிக்க முடி­யாது என்றே கூறினர். இந்த ஆட்­சியை முன்­கொண்டு செல்­வதே எமது இந்த தேர்­தலில் உள்ள போராட்­ட­மாகும். மொட்டு சின்­னத்­திற்கு மீண்டும் ஆட்­சியை வழங்­கு­வதா அல்­லது முன்­னெ­டுத்து செல்­வதா என்­ப­தனை தீர்­மா­னிக்கும் தேர்­த­லாகும்.

வடக்கு பெற்­றோர்கள் சுதந்­தி­ர­மாக போரா­டு­கின்­றனர். இதனை பார்க்க போது

சந்­தோ­ஷ­மாக உள்­ளது. ஹராம் ஹலால் தொடர்­பாக முஸ்­லிம்கள் கடந்த காலத்தில் அச்சம் கொண்­டனர். எனினும் தற்­போது நாம் சுதந்­தி­ரத்தை தந்­துள்ளோம். இது போதாதா?. நீதி­மன்­றத்­தையும் சுயா­தீ­ன­மாக்­கி­யுள்ளோம். தொலை­பேசி அச்­சு­றுத்தல் காலம் நிறைவு பெற்­றுள்­ளது.

தற்­போது தேர்­தலில் வன்­மு­றைகள் கிடை­யாது. ஒற்­று­மை­யாக தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை குறைத்­துள்ளோம். மஹிந்த ராஜ­பக்ஷ தேங்காய் சம்பல் தொடர்­பாக பேசு­கின்றார். நான் அவ­ருக்கு தேங்காய் சம்பல் பற்றி தெளி­வாக கூறுவேன்.வரட்சி கார­ண­மா­கவே தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. தேங்காய் சாப்­பிட முடி­யா­விடின் டின் மீன் சாப்­பி­டுங்கள். நாம் விலை­களை குறைத்­துள்ளோம். மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு தேங்காய் சம்பல் இல்­லா­விட்டால் வயிற்­றுகுள் சோறு இறங்­காதா?.

சுகா­தார நிவா­ர­ணங்­களை மைத்­திரி – ரணில் கூட்­ட­ணியே வழங்­கி­யது. எனினும் முன்­னைய ஆட்­சியின் போது இவ்­வாறு சுகா­தார சேவையை தர­மாக்க நிதி செல­வி­ட­வில்லை. மஹிந்த ராஜ­ப­க்ஷவை இல்­லாமல் செய்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கொண்டு வர போரா­ட­வில்லை. நாட்டின் நிலை­மையை மாற்­றவே ராஜ­ப­க்ஷவை தோற்­க­டித்தோம். பொது மக்­களின் துய­ரங்­களை நாம் அறிவோம். மக்­களின் வழங்­கிய மக்கள் ஆணையை மீண்டும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு காட்­டிக்­கொ­டுக்க மாட்டோம்.

எனவே கிரா­மத்தை எமக்கு வழங்­குங்கள். இது ராஜ­பக்ஷ குடும்­பத்தை வெலி­கடை சிறையில் அடைக்கும் வரு­ட­மாகும். கோத்­தா­பய தற்­போது தப்­பி­யோடி விட்டார். பிர­ஜா­வு­ரிமை இல்­லாமல் ஆக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. பாரிய மோச­டி­களை செய்­துள்­ளனர். ராஜ­பக்ஷ வீரர்­களை நாம் நீதி­மன்­றத்­திற்கு விரைவில் கொண்டு வருவோம்.

இது வசிம் தாஜூதீன் வழக்கு விசா­ரை­ணக்கு வழக்கு தாக்கல் செய்யும் வரு­ட­மாகும். ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்­சியை அமைக்க உத­வுங்கள். இர­க­சிய கருத்து கணிப்பில் கேகா­லையை ஐக்­கிய தேசியக் கட்சி வெற்­றிக்­கொள்ளும் என தெரியவந்துள்ளது. ஜனவரி போராட்டத்தை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். ஜனாதிபதியின் பேச்சை கணக்கெடுக்க வேண்டாம். இது தேர்தல் காலமாகும். 10 திகதிக்கு பின்னர் இதனை விட பலமாக கொண்டு செல்வோம். 2020 இலும் இதே அரசாங்கத்தை கொண்டு செல்வோம். 2025 பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்போம் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top