மாலி: கண்ணி வெடியில் சிக்கி 13 பேர் பலி

மாலி நாட்டில் உள்ள சுரங்கம் ஒன்றில் சென்ற வாகனம் கண்ணி வெடியில் சிக்கியதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாடு மாலி. மாலி நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றின் வழியாக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர்.
சுரங்கத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கியது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.